தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

3


UPDATED : செப் 06, 2026 10:01 PM

ADDED : செப் 06, 2026 03:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 10:01 PM ADDED : செப் 06, 2026 03:07 PM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இந்த கட்டடம் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் உள்ளே இருந்திருக்கலாம் என்றும், குறைந்தபட்சம் 50 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 9 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us