sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

/

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

4


UPDATED : நவ 17, 2025 11:36 AM

ADDED : நவ 17, 2025 10:34 AM

Google News

UPDATED : நவ 17, 2025 11:36 AM ADDED : நவ 17, 2025 10:34 AM

4


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி புதுடில்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தூதரக அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுமாறு தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

இந்த விபத்து குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: சவுதி அரேபியாவின் மதீனா அருகே ஒரு துயரமான பஸ் விபத்தைக் கருத்தில் கொண்டு, ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 8002440003 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



ஜெய்சங்கர் இரங்கல்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ச ங்கர் வெளியிட்ட அறிக்கை: சவுதி அரேபியாவின் மதீனாவில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சவுதி அரேபியா அரசுடன் முழு தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us