900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
ADDED : நவ 05, 2025 06:05 PM

கோல்கட்டா: போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் வினோத் குப்தா, கடந்த 10 ஆண்டுகளில் 900 முறை பாங்காக் சென்றுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கர்தா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வினோத் குப்தா, இவர் மீது கடந்த ஆண்டு இறுதியில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையில் வினோத் குப்தா, வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் போலி பாஸ்போர்ட் மோசடி, ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும்வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்தின் பாங்காக்கிற்கு 10 ஆண்டுகளில் 900 முறை பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்,மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் ஹவாலா நெட்வொர்க் மூலம் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டதா என்பதை விசாரித்து வருகின்றனர்.

