தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை: கனடா முடிவு

சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை: கனடா முடிவு

சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை: கனடா முடிவு

3


ADDED : ஜூன் 11, 2026 03:03 PM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஜூன் 11, 2026 03:03 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டாவா: 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கனடா அரசு அறிமுகம் செய்துள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா, மலேஷியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

பிரான்ஸ், டென்மார்க், போலந்து , பிரிட்டன் ஆகிய நாடுகளும் இதேபோன்ற சட்டத்தை கொண்டு வர பரிசீலனை செய்து வருகின்றன.

இந்நிலையில், கனடாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இச்சட்டம் இன்னும் பார்லிமென்டில் நி றைவேற்றப்படவில்லை.

அதேநேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான கொள்கைகள் தங்களிடம் உள்ளன என நிரூபித்தால் தடையில் இருந்து கனடா விலக்கு அளித்து உள்ளது.

சிறுவர்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட அந்தரங்கப் படங்கள், உள்ளிட்ட ஏழு வகையான தீங்குகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் அவர்களை பாதுகாக்கிறது. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல், மென்பொருட்களை ஒழுங்குபடுத்தவும், இணையதளங்களில் உள்ள தீய உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் விரிவான விதிமுறைகளை கொண்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு தொழில்நுட்ப நிறுவுனங்கள் இணங்குவதை உறுதி செய்ய ஒரு ஒழுங்குமுறை ஆணையம் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us