தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

12


UPDATED : செப் 10, 2026 12:55 PM

ADDED : செப் 10, 2026 11:11 AM

Follow on GoogleFavourite on Google

12

UPDATED : செப் 10, 2026 12:55 PM ADDED : செப் 10, 2026 11:11 AM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று தவெக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத, மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அக்டோபர் 6ல் நடக்க உள்ள தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், தி.மு.க., சார்பில், இரண்டு தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று (செப் 10) தாராபுரம் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று தவெக அறிவித்துள்ளது. இருவரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள்.

கட்சியினர் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தருமாறு என அக்கட்சி தலைவரும், முதல்வருமான விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

பிரத்யேக வீடியோ!

இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us