கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: தவெக வழக்கு
கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: தவெக வழக்கு
UPDATED : செப் 29, 2025 07:27 AM
ADDED : செப் 28, 2025 12:24 PM

சென்னை: கரூர் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தவெக கோரியுள்ளது.
தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. வக்கீல் அறிவழகன் தலைமையிலான தவெக குழுவினர் இந்த முறையீட்டை தாக்கல் செய்தனர்.
இந்த முறையீடு, இன்று 29ம் தேதி மதுரை அமர்வில் மதியம் 2:15 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளது. இத்தகவலை தவெக நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்தார்.