sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு

/

கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு

கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு

கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு

1


ADDED : பிப் 25, 2026 10:12 AM

Google News

1

ADDED : பிப் 25, 2026 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு இன்றும் ரூ.320 அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களில் மட்டும் சவரனுக்கு 2,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. புதிய உச்சமாக ரூ.1.20 லட்சத்தை கடந்தும் விற்பைனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தாலும், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக உயர்ந்து காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 440 ரூபாயிக்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 930க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 3 தினங்களில் மட்டும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தைப் போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவுக்கு 5 ஆயிரம் உயர்ந்து, 2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 5 நாள் தங்கம் விலை நிலவரம்:

25-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,440

24-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,19,120

23-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,18,880

22-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,17,440

21-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,17,440






      Dinamalar
      Follow us