UPDATED : செப் 05, 2025 07:20 PM
ADDED : செப் 05, 2025 03:55 PM

லண்டன்: ஆக்ஸ்போர்டில் உள்ள ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் முதல்வர் உள்ளார். அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்த அவர், இன்று காலை ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவில் ஈவெரா படத்தை திறந்து வைத்தார்.
கடந்த 19ம் நூற்றாண்டில் தமிழுக்கு உலகளவில் பெரும் கண்ணியம் பெற்றுத் தந்தவர் ஜி.யு. போப். அவர் மொழியெபர்த்த திருக்குறள், திருவாசம், நாலடியார் போன்ற நூல்கள், தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் உயர்த்தின. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நகரில் ஜி.யு.போப்பின் கல்லறை உள்ளது. பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜி.யு.போப்!
19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்!தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?அங்குள்ள ஜியு போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.