ஷாங்காய்-டில்லி இடையே நேரடி விமான சேவை: மீண்டும் தொடங்க சீனா ஏர்லைன்ஸ் முடிவு
ஷாங்காய்-டில்லி இடையே நேரடி விமான சேவை: மீண்டும் தொடங்க சீனா ஏர்லைன்ஸ் முடிவு
ADDED : அக் 18, 2025 09:36 PM

பீஜிங்: நவம்பர் 9 முதல் ஷாங்காய்-டில்லி இடையே நேரடி விமானங்களை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மீண்டும் தொடங்க உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசினர்.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே உறவு மேம்பட்டு வருகிறது.
அடுத்தபடியாக, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நவம்பர் 9 முதல் ஷாங்காய் மற்றும் புது டில்லி இடையே பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கும், இது இந்தியா-சீனா உறவுகளை மேம்படுத்துவதன் அடுத்த படியாகும்.
இந்த விமான சேவை, வாரத்திற்கு மூன்று முறை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து மதியம் 12:50 மணிக்குப் புறப்படும் இந்த பயணம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 5:45 மணிக்கு டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
அதேபோல் டில்லியில் இருந்து இரவு 7:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு ஷாங்காய் புடாங்கில் தரையிறங்குகிறது. இந்த வழித்தடத்திற்கான டிக்கெட்டுகள் இப்போதே வாங்கலாம்.