UPDATED : ஜூன் 20, 2026 10:09 AM
ADDED : ஜூன் 20, 2026 09:15 AM

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* பிரபு சங்கர்- சுரங்கத் துறை இயக்குனர்
* ஜெயசீலன்- சுற்றுலாத்துறை இயக்குனர்
* ஆகாஷ் - சிவகங்கை கலெக்டர்
* நிஷாந்த் கிருஷ்ணா - மதுரை கலெக்டர்
* பொன்மணி - அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர்
* இன்னசென்ட் திவ்யா - கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர்
* கவிதா ராமு - டுபிட்கோ மேலாண் இயக்குனர்
* மோகன் - பெருநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்
* ஸ்ரேயா சிங் - சென்னை மாநகராட்சி இணை கமிஷனர்
* ரமண சரஸ்வதி- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர்
ஒரே நாளில் கலெக்டர் இடமாற்றம்
சிவகங்கை கலெக்டராக பொறுப்பேற்ற நிஷாந்த் கிருஷ்ணா, ஒரே நாளில் மதுரைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கடந்த வியாழக்கிழை சிவகங்கை மாவட்ட கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது ஒரே நாளில் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிவகங்கைக்கு மாற்றப்பட்டார்.
