என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்; ராகுல் மீண்டும் அதே பல்லவி!
என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்; ராகுல் மீண்டும் அதே பல்லவி!
UPDATED : நவ 13, 2026 04:28 PM
ADDED : நவ 13, 2026 01:59 PM

நமது சிறப்பு நிருபர்
வெளிநாட்டு சக்திகளின் உதவி, வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் பத்திரங்கள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவரும் ராகுல் தெரிவித்துள்ளார்.
அவர் பிரதமர் மோடியை நேருக்கு நேர் பொது விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் காட்டமான பதிலடியை ராகுலுக்கு கொடுத்தனர். ராகுலின் வெளிநாட்டு பயணம் கடுமையாக விமர்சனம் செய்தனர். தற்போது மீண்டும் பிரதமர் மோடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: என்னுடன் விவாதம் செய்யும்போது தாராளமாக டெலிபிராம்ப்டரை எடுத்து வாருங்கள்; நடுவரைக்கூட நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எப்படியாவது விவாதத்திற்கு வாருங்கள். உண்மையான துரோகி யார் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த நாடே ஆவலாக இருக்கிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
