அசாம் சட்டசபையில் பொது சிவில் சட்டம் அறிமுகம்: லிவ் இன் முறை பதிவு கட்டாயம்
அசாம் சட்டசபையில் பொது சிவில் சட்டம் அறிமுகம்: லிவ் இன் முறை பதிவு கட்டாயம்
ADDED : மே 25, 2026 05:49 PM

கவுகாத்தி: அசாம் சட்டசபையில் பொது சிவில் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில், லிவ் இன் முறையில் வாழ்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாஜ என உறுதி அளித்து இருந்தது.
இந்நிலையில், அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தில் லிவ் இன் உறவு முறையில் வசிப்பவர்களும் அதனை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், அவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.மேலும் இதற்காக திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்வதற்கு பதிவாளர் நியமிப்பது போல், லிவ் இன் முறையில் வசிப்பவர்களை பதிவு செய்ய தனியாக பதிவாளர் நியமிக்க இந்த சட்டத்தில் பிரிவு இடம்பெற்றுள்ளது.இந்த சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
