தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தவெகவுக்கு கம்யூ., கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

தவெகவுக்கு கம்யூ., கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

தவெகவுக்கு கம்யூ., கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

29


UPDATED : மே 08, 2026 05:40 PM

ADDED : மே 08, 2026 03:47 PM

Follow on GoogleFavourite on Google

29

UPDATED : மே 08, 2026 05:40 PM ADDED : மே 08, 2026 03:47 PM


29
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று தலா 2 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க விஜய்யை கவர்னர் அழைக்கவில்லை.

இந்நிலையில் கம்யூ., கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக சார்பில் ஆதரவு கோரி கடிதம் தரப்பட்டது. நேரிலும் சென்று நிர்வாகிகள் பேச்சு நடத்தினர்.

இதை தொடர்ந்து இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இரு கம்யூ., கட்சிகளும், தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு எடுத்துள்ளன. இதற்கான கடிதத்தை இந்திய கம்யூ., இன்று அதிகாரபூர்வமாக வழங்கியது. இதே முடிவை மார்க்சிஸ்ட் கட்சியும் எடுத்துள்ளது. அதற்கான ஆதரவு கடிதத்தை இ மெயில் மூலம் அக்கட்சி அனுப்பி இருக்கிறது. இந்த இரு கட்சிகளையும் பின்பற்றி விசிகவும் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us