தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு; கிரிஷ் சோடங்கர்
தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு; கிரிஷ் சோடங்கர்
ADDED : மே 06, 2026 03:59 PM

சென்னை; புதியதாக அமைய உள்ள தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார்.
அவரது பேட்டி:
கட்சியின் மூத்த தலைவர்களுடன்.,எங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தவெக தலைவர் விஜயை சந்தித்தோம். அவருக்கு நாங்கள் எங்களின் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருக்கிறோம். அதற்கான ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளோம். விஜய் சிறப்பாக செயல்பட வாழ்த்தும் தெரிவித்தோம்.
மேலும் சில கட்சிகள் தங்களின் ஆதரவை தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் கூட்டணி அரசு அமைவது உறுதி. வெளியில் இருந்து ஆதரவளிக்கவில்லை, நாங்கள் இந்த அரசின் ஒரு அங்கம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி இருந்து 5 எம்எல்ஏக்களையும் பெற்றுவிட்டு, இப்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்களே? இது நம்பிக்கை துரோகம் ஆகாதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், எங்களை பொறுத்தவரை மக்களின் தீர்ப்பு தான் இறுதியானது என்று பதிலளித்தார்.
