UPDATED : மே 10, 2026 09:34 PM
ADDED : மே 10, 2026 04:19 PM

-நமது நிருபர்-
முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பிரதமர் மோடி உறுதி
முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்யை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
திருவருள் துணை நிற்கும்
தாயின் கனிவோடும் தந்தையின் பொறுப்போடும் அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.
- தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
நல்லன நிகழ்க
முதல்வர் பணி என்பது விஜய்க்கு கடினமானதொன்றும் அல்ல. தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி நல்லன நிகழ்க.
-எழுத்தாளர் ஜெயமோகன்
மதிப்பு உயர்த்தும் ஆட்சி
தமிழ்நாட்டு மக்கள் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள்நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்புகிறேன்.
-கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்
இலங்கை மக்கள் வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற இலங்கை மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்
-இலங்கை அதிபர் அனுரா திசநாயகே
ஆற்றலை கொண்டு வரும்
இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலை ஏற்படுத்துவதற்கான ஆற்றலையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றேன்
-சஜித் பிரேமதாசா, இலங்கை எதிர்க்கட்சி தலைவர்
சத்குரு வாழ்த்து
முதல்வர் ஜோசப் விஜய்க்கு நல்வாழ்த்துகள். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வைத்திருக்கும் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றப் பொறுப்பேற்கும் புதிய அரசாங்கத்திற்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்- சத்குரு, நிறுவனர், ஈஷா யோகா
மம்தா வாழ்த்து
முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு எனது மனதார வாழ்த்துக்கள். தேர்தலின் முடிவுகள் தமிழக மக்களின் எண்ணம், நம்பிக்கை மற்றும் ஜனநாயகத்தை பிரதிபலிக்கிறது. விஜய்யின் தலைமையில் தமிழகம் முன்னேற்றத்துடன் கூடிய வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்புகிறேன். அர்ப்பணிப்புடன் மக்கள் சேவை செய்வதில் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
