தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி

தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி

தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி

3


UPDATED : அக் 20, 2026 07:56 AM

ADDED : அக் 20, 2026 07:55 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : அக் 20, 2026 07:56 AM ADDED : அக் 20, 2026 07:55 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரிய காங்கிரஸ் கட்சிக்கு பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிக்க பலமுறை அரசு நேரம் கேட்டது; அதை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது. தற்போது மீண்டும் அதே கோரிக்கையை பொது வெளியில் முன் வைப்பது எதற்கு என்று தெரியவில்லை. ஒருமித்த முடிவை எட்டுவதற்கு திமுக, சமாஜ்வாதி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசிய வா த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிளுடன் அரசு ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் இனியும் தடைகளை ஏற்படுத்தாமல் முக்கிய சட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார். தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். ''தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படலாம்'' என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us