ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக பார்த்த காங்.,: அமித்ஷா சாடல்
ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக பார்த்த காங்.,: அமித்ஷா சாடல்
ADDED : டிச 29, 2025 03:29 PM

நகோன்: '' அசாம் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரர்களை காங்கிரஸ், தங்களின் ஓட்டு வங்கியாக பார்த்தது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அசாம் மாநிலம் நகோன் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்கள் அனைவரையும் வெளியேற்றுவது என பாஜ உறுதிபூண்டுள்ளது. இங்கு வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் இருப்பது சரியானதா? ஊடுருவல்காரர்களை அப்புறப்படுத்திய அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மாவை பாராட்டுகிறேன். ஊடுருவல்காரர்களிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தை அசாம் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும், அசாம் மாநிலத்துக்காக போராடியவர்களுக்காக எதையும் செய்யவில்லை.
அசாம் மக்கள், நிலம் மற்றும் கலாசாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்த ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் ஓட்டு வங்கியாக பார்த்தது. அசாம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை பாஜ அரசு கண்டறியும். பிரதமர் மோடி, அசாம் மக்களின் கலாசார அடையாளத்தை மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சியிலும் கவனத்தில் கொண்டு உள்ளார். அசாமை ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற இன்னொரு ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

