தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் முகத்தில் கரியை பூசியது திமுக!

காங்கிரஸ் முகத்தில் கரியை பூசியது திமுக!

காங்கிரஸ் முகத்தில் கரியை பூசியது திமுக!


UPDATED : நவ 28, 2026 11:48 AM

ADDED : நவ 28, 2026 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 11:48 AM ADDED : நவ 28, 2026 11:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூட்டணியில் இருந்து விலகிச்சென்றதுடன் கடுமையாக விமர்சனமும் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் முகத்தில் கரியைப் பூசும் வகையில், மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மங்கிய நிலையிலும், அதை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் ஆதரவு அளித்துக் கொண்டிருந்தது திமுக.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனித்த செல்வாக்கு எதுவும் இல்லாத நிலையிலும், 10 எம்.பி., சீட்டுகளை அள்ளிக்கொடுத்து வெற்றி பெறச் செய்ததுடன், ராஜ்யசபா இடங்களையும் திமுக விட்டுக் கொடுத்தது. ஆனால், சட்டசபை தேர்தலில் திமுக தோற்றதும், முதல் ஆளாக ஓடிச்சென்று விஜய் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்து கொண்டது காங்கிரஸ் கட்சி.

5 எம்எல்ஏ.,க்கள் வெற்றி பெற உதவியாக இருந்த தங்களுக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை என்பது திமுக தலைவர்களின் வருத்தம். அது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்கள் பலரும், திமுகவினரை குறை கூறி தினமும் பேசி வருகின்றனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த திமுக, தன் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது.

முதல் முறையாக, பார்லியில் தேஜ கூட்டணி அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மசோதா வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

மசோதாவை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வரும் காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் முகத்தில் கரியைப் பூசும் நோக்கத்துடன் திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us