தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

21


ADDED : அக் 22, 2026 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 10:08 PM

21


21
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை:

மஹாராஷ்டிராவில் சமீபத்தில், 'மஹாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் - 2026' நடைமுறைக்கு வந்தது. இது, கட்டாயப்படுத்துதல், மோசடி, வற்புறுத்தல், துாண்டுதல், தவறான சித்தரிப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை குற்றமாக கருதுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன் படி, மதம் மாறும் முன் தனிநபர்கள், 60 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில், தானேவைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர், இச்சட்டத்தை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி.திரிபாதி, நீதிபதி அத்வைத் சேத்னா விசாரித்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தச் சட்டம், அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தை பரப்புவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்தச் சட்டம், சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், கட்டாயப்படுத்துதல் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை தடுக்கவும் கொண்டு வரப்பட்டது.

'எவருக்கும், தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. ஆனால், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது' என,

சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, மனு திரும்ப பெறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us