தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன; ஸ்டாலின் குற்றச்சாட்டு

எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன; ஸ்டாலின் குற்றச்சாட்டு

எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன; ஸ்டாலின் குற்றச்சாட்டு

34


UPDATED : அக் 07, 2026 12:27 PM

ADDED : அக் 07, 2026 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:27 PM ADDED : அக் 07, 2026 11:28 AM

34


34
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு; சட்டம் ஒழுங்கு சீரழிந்து ரத்தச் சகதியில் தமிழகம் சிக்கியுள்ளது. குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சி செய்திகள் அமைந்துள்ளன.

சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எண்ணூர் ரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.

ரீல்ஸ் போடுவதில்….

வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழகம் ரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.

போலீசாரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?

குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மனித உயிர்கள்

மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதல்வரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிறப்பு வீடியோ!

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை; குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us