தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சென்னைக்கு 'நோ' சொன்ன லக்னோ; 'செக்' வைத்தார் மிட்சல் மார்ஷ்

சென்னைக்கு 'நோ' சொன்ன லக்னோ; 'செக்' வைத்தார் மிட்சல் மார்ஷ்

சென்னைக்கு 'நோ' சொன்ன லக்னோ; 'செக்' வைத்தார் மிட்சல் மார்ஷ்

4


UPDATED : மே 16, 2026 12:28 AM

ADDED : மே 15, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : மே 16, 2026 12:28 AM ADDED : மே 15, 2026 11:21 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: லக்னோ அணியின் மிட்சல் மார்ஷ் 38 பந்தில் 90 ரன் வி ளாச, சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

கார்த்திக் அரைசதம்


சென்னை அணியின் 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர். ஆகாஷ் சிங் 'வேகத்தில்' முதலில் கேப்டன் ருதுராஜ் (13) வீழ்ந்தார். தொடர்ந்து மிரட்டிய ஆகாஷ் பந்தில் சாம்சன் (20), உர்வில் படேல் (6) அவுட்டாக, 7.2 ஓவரில் 52/3 ரன் எடுத்து தத்தளித்து. பின் பிரவிஸ், கார்த்திக் சர்மா விவேகமாக விளையாடினர். ஷமிபந்தில் பிரவிஸ் (25) கிளம்பினார். ஷாபாஸ் ஓவரின் (16வது) முதல் 3 பந்துகளில் 6,4,4 என விளாசிய கார்த்திக் (71 ரன், 42 பந்து, 6x4, 5x6), 6வது பந்தில் அவுட்டானார்.

பிரின்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே 6,4,4,6 என அடித்து நொறுக்க, மொத்தம் 23 ரன் கிடைத்தன. சென்னை அணி 20 ஓவரில் 187/5 ரன் எடுத்தது. ஷிவம் துபே (32), பிரஷாந்த் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

மார்ஷ் மிரட்டல்


சவாலான இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ் அதிரடி துவக்கம் கொடுத்தனர். சென்னை பவுலர்கள் சொதப்ப, எளிதாக ரன் எடுத்தனர். கம்போஜ் ஓவரில் மார்ஷ் வரிசையாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 28 ரன் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து ஸ்பென்சர் ஜான்சன் ஓவரில் 4,4,6 என விளாசிய மார்ஷ், 21 பந்தில் அரைசதம் எட்டினார். முகேஷ் சவுத்ரி ஓவரின் (12வது) 4வது பந்தில் இங்லிஸ் (36) வெளியேறினார். 5வது பந்தில் ரன் அவுட்டான மார்ஷ் (90 ரன், 38 பந்து, 9x4, 7x6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அப்துல் சமது (7) நிலைக்கவில்லை. கம்போஜ் ஓவரில் வரிசையாக நான்கு சிக்சர் பறக்கவிட்ட பூரன், தொடர்ந்து நான்காவது வெற்றி பெறும் சென்னை கனவுக்கு 'நோ' சொன்னார்.

இதனால் சென்னை அணியின் 'பிளே ஆப்' வாய்ப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது. லக்னோ அணி 16.4 ஓவரில் 188/3 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. பூரன் (32), முகுல் சவுத்ரி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us