இயற்கை பேரிடர்களுக்கு மரங்கள் வெட்டப்படுவதே காரணம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இயற்கை பேரிடர்களுக்கு மரங்கள் வெட்டப்படுவதே காரணம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : செப் 05, 2025 12:57 AM

புதுடில்லி:'ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மேகவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதே காரணம்' என, அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது. சமீபத்தில் ஹிமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்த கனமழையால் பலர் உயிரிழந்தனர்.
மலைபாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில், ஏராளமான கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தன.
இந்நிலையில் இந்த நிலச்சரிவு மற்றும் பெரு வெள்ளத்திற்கான காரணத்தை அறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரியும், எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர்கள் நிகழாத அளவுக்கு உரிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிரடி செயல் திட்டங்களை அமல் படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் ஆகாஷ் வஷிஷ்டா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
பருவநிலை மாற்றம் அதில் கூறப்பட்டுள்ள தாவது:
இயற்கை சீற்றங்களை சமாளிக்க பேரிடர் மேலாண்மை படையை அமைத்ததை தவிர மத்திய, மாநில அரசுகள் வேறு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
உயிர் சேதங்களை தடுப்பதற்கோ, பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கோ எந்த திட்டமும் தீட்டப்படவில்லை.
இம யமலை பகுதி யில் ஓடும் ஆறுகளும், அதன் அழகிய சூழலியலும் அழிந்து வருகின்றன. அவற்றை பாதுகாப்பதற்கான கடமையில் இருந்து மத்திய சுற்று ச்சூழல், வனம், பருவ நிலை மாற்றம் மற்றும் ஜல்சக்தி அமைச்சகங்கள் தவறிவிட்டன.
இந்த மனு பெருவாரியான மக்களின் நலனை கருத்தில் வைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் வாழ்வதற்கான அரசியலமைப்பு உரிமையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இமயமலை ஒட்டிய மாநிலங்களில் வாழும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஜம்மு - காஷ்மீரை தவிர இமயமலை ஒட்டி இருக்கும் ஹிமாச்சல், உத்தராகண்ட் மாநிலங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளுக்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும்.
இதற்காக ஒரு சுயாதீன நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு வாயிலாக புவியியல், புவிதொழில் நுட்பவியல் அல்லது சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை நடத்த வேண்டும்.
இதற்காக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
வெள்ளம் பாதித்த மாநிலங்களில் ஓடும் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வழித் தடங்களிலும் ஆய்வு நடத்தி காரணத்தை அறிய வேண்டும்.
வெள் ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம், மீட்பு, பாதுகாப்பு, மருத்துவ முதலுதவி போன்ற அவசரகால உதவிகள் சென்று சேருகிறதா என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடர் கால அவசர பணிகளை மேற்கொ ள்ளும் துறைகளுக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உத்தராகண்ட், ஹிமாச்சல் மற்றும் பஞ்சாபில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்துண்டுகள், கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
இதன் மூலம் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாகவே தோன்றுகிறது.
எனவே, இது பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மோசமான சூழல் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேறு ஒரு வழக்கிற்காக நீதிமன்ற அறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரை அழைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ''மோசமான சூழலை புரிந்து கொண்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்,'' என அறிவுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, ''இயற்கையின் வழியில் நாம் நிறையவே குறுக்கிட்டு விட்டோம். அதற்கு பிரதிபலனாகவே இயற்கை நமக்கு சீற்றத்தை பரிசளித்து வருகிறது.
''இ து தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலர் மற்றும் மாநில தலைமை செயலர்களிடம் பேசுகிறேன். இத்தகைய மோசமான சூழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என, தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.