தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சபாநாயகருடன் சிவி சண்முகம் - இபிஎஸ் தனித்தனியே சந்திப்பு

சபாநாயகருடன் சிவி சண்முகம் - இபிஎஸ் தனித்தனியே சந்திப்பு

சபாநாயகருடன் சிவி சண்முகம் - இபிஎஸ் தனித்தனியே சந்திப்பு


UPDATED : மே 12, 2026 02:03 PM

ADDED : மே 12, 2026 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 02:03 PM ADDED : மே 12, 2026 01:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அதிமுக சட்டசபை தலைவரை நியமிப்பது தொடர்பாக சிவி சண்முகம் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன், சபாநாயகரை தனித்தனியே சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக, முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்எல்ஏவுமான சிவி சண்முகம் பேட்டி அமைந்துள்ளது. அதாவது, இபிஎஸ்ஸின் தலைமையை எதிர்க்கும் விதமாக, எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டசபை தலைவராக நியமிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு, சிவி சண்முகம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்தார். அப்போது, அதிமுக சட்டசபை குழு தலைவராக எஸ்பி வேலுமணியும், கொறடாவாக விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டதாக கடிதத்தை வழங்கினர். அதன்பிறகு, சண்முகம், வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் மெரினாவிலுள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் பிரபாகரை தனியே சந்தித்துள்ளனர். அப்போது, அதிமுக சட்டசபை குழு தலைவராக இபிஎஸ் நியமிக்கப்பட்டிருப்பதாக கடிதம் அளித்துள்ளனர். அதன்பிறகு, இபிஎஸ்ஸூம் சபாநாயகரை சந்தித்து பேசினார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற கோஷ்டி பூசலுக்குப் பிறகு, எஸ்வி சண்முகம் - இபிஎஸ் என்ற கோஷ்டி பிரச்னை மீண்டும் அதிமுகவில் கிளம்பியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us