தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருளுடன் சென்ற தர்கா நிர்வாகிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருளுடன் சென்ற தர்கா நிர்வாகிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருளுடன் சென்ற தர்கா நிர்வாகிகளுக்கு தடை!

26


ADDED : செப் 25, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:57 AM

26


26
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்களை கொண்டு சென்ற தர்கா நிர்வாகிகளை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் வழிபாட்டுக்கு முறைதாரர்கள் செல்வதும், அவர்கள் 7 நாட்களுக்கு ஒரு முறை மாறுவதும் வழக்கம். நேற்று காலை முறைதாரர் அப்பாஸ் அவரது குடும்பத்தினர் சமைத்து சாப்பிடுவதற்காக அரிசி, தக்காளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் சென்றனர். மலைக்குமேல் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சமையல் பொருட்களை மலைக்கு மேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை என தர்கா நிர்வாகியை தடுத்து நிறுத்தினர்.

இதில் கோபம் அடைந்த அவர்கள், தொடர்ந்து இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாகவும், இதனால் மலை மீது உள்ள தர்காவின் சாவியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறிச் சென்றனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் மின்அடுப்பு, சமையல் பொருட்களுடன் மலைக்கு செல்ல வந்தபோது மீண்டும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து மலைமேல் உணவு சமைக்க கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, மலைமீது உணவு சமைக்கும் பொருட்களை எடுத்துச் சொல்ல கூடாது என்றும் பேரிச்சம்பழம், பிஸ்கட் போன்ற பண்டங்களை மட்டும் எடுத்துச் செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சிறிது நேரம் கழித்து நிர்வாகிகள் பழங்கள், பேரிச்சம்பழம், பிஸ்கட் உள்ளிட்டவற்றை மட்டும் மலைக்கு எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us