sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

1996 முதல் 2011ம் ஆண்டு வரை டில்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்; ஒரு பார்வை

/

1996 முதல் 2011ம் ஆண்டு வரை டில்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்; ஒரு பார்வை

1996 முதல் 2011ம் ஆண்டு வரை டில்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்; ஒரு பார்வை

1996 முதல் 2011ம் ஆண்டு வரை டில்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்; ஒரு பார்வை


UPDATED : நவ 10, 2025 10:32 PM

ADDED : நவ 10, 2025 10:27 PM

Google News

UPDATED : நவ 10, 2025 10:32 PM ADDED : நவ 10, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; தலைநகர் டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில் கடந்த காலங்களில் (1996-2011) அங்கு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

மே 25, 1996; லஜ்பத் நகர் மத்திய சந்தையில் குண்டுவெடிப்பு, 16 பேர் பலி

அக்.1. 1997; சதார் பஜார் அருகே 2 குண்டுகள் வெடித்தன. கிட்டத்தட்ட 30 பேர் காயம் அடைந்தனர்.

அக்.10, 1997; சாந்திபவன், கவுடியா புல் மற்றும் கிங்ஸ்வே கேம்ப் பகுதிகள் என 3 இடங்களில் குண்டுவெடிப்பு. ஒருவர் பலியாக, 16 பேர் காயம்

அக்.18, 1997; ராணிபாக் மார்க்கெட் பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு, ஒருவர் பலியானார். 23 பேர் காயம்.

அக்.26, 1997; கரோல்பாக் மார்க்கெட்டில் இரட்டை குண்டுவெடிப்பு, ஒருவர் பலி, 34 பேர் காயம்.

நவ.30, 1997; செங்கோட்டை பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு, 3 பேர் பலி, 70 பேர் காயம்.

டிச.30, 1997; பஞ்சாபி பாக் அருகே பஸ்நிலையத்தில் குண்டுவெடிப்பு, 4 பேர் பலி, 30 பேர் காயம்.

ஜூன் 18, 2000; செங்கோட்டை அருகே இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு, 2 பேர் பலி, 12 பேர் காயம்.

மார்ச் 16. 2000; சாதர் பஜார் குண்டுவெடிப்பு, 7 பேர் காயம்.

பிப்.27, 2000; பஹர்கன்ஜ் பகுதியில் குண்டுவெடிப்பு, 8 பேர் காயம்.

ஏப்.14, 2006; ஜமா மஸ்ஜித் முன்பு 2 குண்டுவெடிப்புகள், 14 பேர் காயம்.

மே 22, 2005; லிபர்ட்டி மற்றும் சத்யம் சினிமா வளாகங்களில் 2 குண்டு வெடிப்புகள், ஒருவர் பலி, 60 பேர் காயம்.

அக்.29,2005; சரோஜினி நகர், பஹர்கன்ஜ், கோவிந்த்புரி ஆகிய பகுதிகளில் 3 குண்டுவெடிப்புகள், 62 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்.

செப்.13, 2008; கரோல் பாக், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ்-1 ஆகிய பகுதிகளில் 5 முறை குண்டுவெடிப்பு, 30 பேர் பலி, 90 பேர் காயம்.

செப்.27, 2008; மேஹ்ராலி பூ மார்க்கெட், 3 பேர் பலி, 28 பேர் காயம்.

மே 25, 2011; டில்லி ஐகோர்ட் வாகன நிறுத்துமிடத்தில் குண்டுவெடிப்பு, உயிரிழப்பு இல்லை.






      Dinamalar
      Follow us