டில்லி கார் குண்டுவெடிப்பு: போலீஸ் கமிஷனர் விளக்கம்
டில்லி கார் குண்டுவெடிப்பு: போலீஸ் கமிஷனர் விளக்கம்
ADDED : நவ 10, 2025 10:21 PM

புதுடில்லி: சிக்னல் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் மாலை குண்டு வெடித்ததாக டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியுள்ளார்.
கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது: செங்கோட்டை அருகே இன்று மாலை 6:52 மணிக்கு மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் குண்டுவெடித்தது. அப்போது அங்கு சிலர் இருந்தனர்.
அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. டில்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி, தடயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடக்கிறது.
கூடுதல் தகவல் கிடைத்ததும் பகிரப்படும். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

