டில்லி இளைஞர்களுக்கு தோள் கொடுக்கும் 'டெலிவரி' வேலை
டில்லி இளைஞர்களுக்கு தோள் கொடுக்கும் 'டெலிவரி' வேலை
ADDED : செப் 10, 2025 04:28 AM

புதுடில்லி : டில்லியில் வசிக்கும் 70 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் முக்கிய தளமாக, இ - வணிக நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக பகுதி நேர வேலைவாய்ப்புகள் மூலம் இளைஞர்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் பலர் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள பகுதி நேர ஒப்பந்த தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். அதற்கான அடித்தளத்தை, இ - வணிக நிறுவனங்கள் உருவாக்கி தருகின்றன.
இது குறித்து, 'அதிகாரமி க்க இந்தியா' என்ற அமைப்பு, 15 மாவட்டங் களில் 90,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 'அமேசான், டெல்லிவரி, மீஷோ' போன்ற இ - வணிக நிறு வனங்கள் இளைஞர்களின் வாழ்வை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது.
மேலும், டில்லியில் வசிக்கும் ஒப்பந்த தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர், பகுதிநேர வேலை வாய்ப்புகளை பெற்று, தங்கள் வருவாயை ஈட்டி வருவதும் தெரியவந்தது.
இது குறித்து அதிகாரமிக்க இந்தியா அமைப்பின் இயக்குநர் கிரி கூறியதாவது:
'அமேசான், டெல்லி வரி' போன்ற நிறுவனங்கள் தங்களது முதலீடுகள் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு அமைவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தி தருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.