தேவாவின் இறுதி நிமிடங்கள்; உருக்கமுடன் விவரிக்கும் மகன் ஸ்ரீகாந்த்
தேவாவின் இறுதி நிமிடங்கள்; உருக்கமுடன் விவரிக்கும் மகன் ஸ்ரீகாந்த்
ADDED : அக் 17, 2026 04:09 PM

தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது என்று அவரது மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உருக்கமுடன் விவரித்து உள்ளார்.
அவர் கூறி உள்ளதாவது;
திடீரென என் அப்பா எங்களை விட்டுவிட்டு போய்விட்டார். காலையில் கார்டியாக் அரெஸ்ட். வீட்டில் நெஞ்சு ஒருமாதிரியாக படபடப்பாக இருக்கிறது என்றார். நான் போய் பார்த்துவிட்டு, ஆம்புலன்ஸ் கூப்பிட்டால் கூட லேட்டாக வரும் என்று சொல்லிட்டு, நாங்களே கைத்தாங்கலாக கூட்டிட்டு காரில் வீட்டின் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம்.
வரும்போது சிபியூ பண்ணினார்கள், கார்டியாக் அரெஸ்ட் என்பதால் அப்படியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. எல்லாரும் வந்து பார்த்தார்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாரும் வந்தனர். முக்கியமாக முதல்வர் விஜய்யும் வந்து பார்த்துவிட்டு போனார். அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என்று அறிவித்துள்ளதற்கு என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும், முதல்வருக்கும், அமைச்சருக்கும் ரொம்ப நன்றி.
ஆற்காடு அருகில் சக்கரமல்லூர் என்ற கிராமத்தில் என் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய இருக்கிறோம். நாளை மதியம் 1 மணியளவில் இங்கிருந்து புறப்படுகிறோம்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தேவா கூறினார்.
