தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வலுவான உள்நாட்டு பாதுகாப்பு அவசியம்; அமித் ஷா

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வலுவான உள்நாட்டு பாதுகாப்பு அவசியம்; அமித் ஷா

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வலுவான உள்நாட்டு பாதுகாப்பு அவசியம்; அமித் ஷா

1


ADDED : ஆக 26, 2026 02:01 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஆக 26, 2026 02:01 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 2047க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வலுவான உள்நாட்டுப் பாதுகாப்பு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற உளவுத்துறையின் தேசியப் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது; ஊடுருவல், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புதிதாக உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியாது.

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், குறுகிய காலத்தில் இந்தியாவை சட்டவிரோத ஊடுருவல் இல்லாத நாடாக மாற்றவும், விரிவான எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாடு தர்மசாலா அல்ல, இந்திய குடிமக்கள் மட்டுமே இங்கு வாழ உரிமை உண்டு.

பயங்கரவாத வலைப்பின்னல்களை முழுமையாக அகற்ற பிரஹார் உத்தியைப் பின்பற்ற வேண்டும். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் கடுமையான நடவடிக்கை பின்பற்ற வேண்டும், இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us