தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தேர்தலில் போட்டியிட விடாமல் பிரேமலதா தடுத்தாரா?

தேர்தலில் போட்டியிட விடாமல் பிரேமலதா தடுத்தாரா?

தேர்தலில் போட்டியிட விடாமல் பிரேமலதா தடுத்தாரா?


ADDED : மார் 30, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வில் இணைந்த தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், கடைசி நேரத்தில், மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த தி.மு.க., தலைமை, அப்போது தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்த சந்திரகுமார், சி.எச்.சேகர், பார்த்திபன் ஆகியோரை தன் பக்கம் இழுத்தது.

அந்தத் தேர்தலில், அவர்கள் மூவருக்கும் தி.மு.க., வாய்ப்பளித்தது. 2019 லோக்சபா தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு, பார்த்திபன் எம்.பி.,யானார். கடந்த 2025 பிப்ரவரியில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ., ஆனார்.

இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, இந்த மூவரும் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என, தி.மு.க., தலைமை உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று முன்தினம் வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், அவர்களது பெயர் இல்லை. தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அழுத்தத்தின் பேரிலேயே, தி.மு.க., தலைமை அவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us