இக்கட்டான சூழலில் உதவிய 'தினமலர்' சந்தா காப்பீடு திட்டம்: பயன் பெற்றவர்கள் உருக்கம்
இக்கட்டான சூழலில் உதவிய 'தினமலர்' சந்தா காப்பீடு திட்டம்: பயன் பெற்றவர்கள் உருக்கம்
ADDED : செப் 28, 2026 10:21 PM

திருப்பூர் : 'தினமலர்' சந்தா காப்பீடு திட்டம், இக்கட்டான நேரத்தில் கைகொடுத்ததாக, அதில் பயன் பெற்றவர்கள் உருக்கத்துடன் கூறினர்.
'விபத்து சிகிச்சைக்கு, 'தினமலர்' நிறுவனம் வழங்கிய யுனைடெட் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் தொகை, பண நெருக்கடியை சமாளிக்க உதவியது' என, திருப்பூரைச் சேர்ந்த நளினி, 31, கூறினார்.
அவர் கூறியதாவது:
நான், ஆடை உற்பத்தி நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணிபுரிகிறேன். நானும், என் மகளும் டூ - வீலரில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில், நிலைதடுமாறி கீழே விழுந்தோம். இதில், என் முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
'தினமலர்' சந்தாதாரராக இருப்பதால், அதன் வாயிலாக கிடைத்த யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிகிச்சைக்கான கட்டணத்தை பெற, 'தினமலர்' அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.
அவர்களின் உதவி மற்றும் வழிகாட்டுதலுடன், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 37 ஆயிரம் ரூபாய் தொகை கிடைத்தது. இக்கட்டான சூழலில், இன்சூரன்ஸ் மூலம் கிடைத்த தொகை பெரும் உதவியாக அமைந்தது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5 லட்சம் பெற்றோம்
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் பகுதியைச் சேர்ந்த புஷ்பவள்ளி:
நானும், என் கணவர் சுந்தரமும், 77, டூ - வீலரில் சென்றபோது, எதிரில் வந்த பைக் மோதியது. இதில், நாங்கள் இருவரும் காயமடைந்து, கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். விபத்தில் படுகாயமடைந்த என் கணவருக்கு, தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.
நான் கடந்த ஆண்டே 'தினமலர்' ஆண்டு சந்தா செலுத்தி, சந்தாதாரராக இருந்ததால், நிறுவனத்தின் சார்பில், விபத்து காப்பீடு வழங்கப்பட்டிருந்தது.
'தினமலர்' அலுவலர்களின் உதவி மற்றும் வழிகாட்டுதலுடன், காப்பீட்டு நிறுவனத்தினர் மூலம், 5 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை எங்கள் குடும்பத்துக்கு கிடைத்தது. மருத்துவ சிகிச்சைக்காக நிறைய தொகை செலவான நிலையில், 'தினமலர்' சந்தா காரணமாக கிடைத்த காப்பீட்டு தொகை, எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
எதிர்பாராத உதவி
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன், 30, கூறியதாவது:
திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறேன். ஒன்றரை மாதம் முன், டூ - வீலரில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விழுந்தேன். இதில், என் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெருமாநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனக்கு வேறு எந்த இன்சூரன்சும் இல்லாத நிலையில், சிகிச்சைக்கான முழு தொகையையும் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது தான், 'தினமலர்' நாளிதழுக்கு ஆண்டு சந்தா செலுத்தியிருந்ததும், அதற்கு நிறுவனத்தினர் இலவசமாக காப்பீடு வழங்கியிருந்ததும் நினைவுக்கு வந்தது. சிகிச்சை முடிந்ததும், அடுத்த, 10 நாட்களில், என் வங்கி கணக்கில் 67 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. அந்த தொகை, எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
இவ்வாறு, அவர் கூறினார்.
