தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம்; ஒமர் அப்துல்லாவை மிரட்டும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம்; ஒமர் அப்துல்லாவை மிரட்டும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம்; ஒமர் அப்துல்லாவை மிரட்டும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

6


ADDED : நவ 01, 2026 09:35 PM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : நவ 01, 2026 09:35 PM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 90 எம்எல்ஏக்களைக் கொண்ட இந்த சட்டசபையில் தேசிய மாநாட்டு கட்சி 41 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. அண்மையில், ஒமர் அப்துல்லா தனது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

தற்போது, முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு எதிராகவே, அவரது கட்சியைச் சேர்ந்த 25 அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பியுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும், தகுதியின் அடிப்படையில் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டும், முதல்வரின் தலைமை ஆலோசகரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஆகியவற்றை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.

இதனை பரிசீலித்து 14 நாட்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஒமர் அப்துல்லாவுக்கு கெடு விதித்த அதிருப்தி எம்எல்ஏக்கள், தவறினால் கவர்னர் மாளிகைக்கு பேரணியாக சென்று, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அப்படி, அரசுக்கான ஆதரவை அவர்கள் விலக்கிக் கொண்டால், ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்திலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவை, மம்தாவால் இன்னும் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us