ஓட்டுக்களை பிரிக்கவே திமுக, அதிமுக தனித்தனியாக போட்டி; சொல்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
ஓட்டுக்களை பிரிக்கவே திமுக, அதிமுக தனித்தனியாக போட்டி; சொல்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
ADDED : செப் 24, 2026 12:20 PM

சென்னை: இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இணைந்து போட்டியிட திட்டமிட்டன; ஓட்டுக்களை பிரிக்கவே திமுக, அதிமுக தனித்தனியாக போட்டியிடுகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி: தவெகவுக்கு இடைத்தேர்தலில் எந்த பின்னடைவும் இல்லை; திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முயன்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ளவர்கள ரிசைன் செய்து விட்டு மக்கள் பலம் உள்ள கட்சியில் இணைந்தனர். இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இணைந்து போட்டியிட திட்டமிட்டன; ஓட்டுக்களை பிரிக்கவே திமுக, அதிமுக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
திமுக, அதிமுகவுடன் சேர்ந்து ஒரே வேட்பாளரை போட திட்டமிட்டு அதன் பின்னர் தான் மாற்றி உள்ளனர். தவெக வேட்பாளர்களை மக்கள் எதிர்க்கவில்லை; திமுக, அதிமுகவினர் திட்டமிட்டு எதிர்க்கின்றனர். திமுகவும், அதிமுகவும் ஆட்களை வைத்து கோஷம் போடுகின்றனர். திமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக முடிவு செய்ததால் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதில் தவறில்லை; இபிஎஸ்யின் துரோகத்தை பார்க்க முடியாததால் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
மதுரை கோவில் கும்பாபிஷேக பணிகளில் அறங்காவலர் குழுவினர் சுதந்திரமாக செயல்பட்டனர். பிடிஆர் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் நிதி அமைச்சர் பதவியில் இருந்து அவரை ஏன் திமுக தூக்கியது? இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
