விரைவில் திமுக ஆட்சி உதயமாகும்; சொல்கிறார் ஸ்டாலின்
விரைவில் திமுக ஆட்சி உதயமாகும்; சொல்கிறார் ஸ்டாலின்
UPDATED : நவ 16, 2026 11:23 AM
ADDED : நவ 16, 2026 11:15 AM

சென்னையில் நடந்த கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் நமது ஆட்சி உதயமாக தான் போகிறது. அதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வர போகிறது. தமிழகத்தில் 6 மாத காலமாக ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக்கூடாது. அது ஒரு காட்சியாக தான் நடந்து கொண்டு இருக்கிறது. தவெக ஆட்சி வெற்று சீன்போடும் ஆட்சி. மாற்றம் என்று சொன்னார்கள்; தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
திரையில் கதாநாயகனாக நடித்து, இன்றைக்கு நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டு இருப்பவர் தான் தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள்; வன்கொடுமைகள் தான் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக இருப்பவர்கள் பற்றி உங்களுக்கு தெரியும்.
பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். தவெகவுக்கு பெயரை மாற்றி கூட, அந்த கட்சிக்கு பாலியல் சுரண்டல் கழகம் என பெயர் வைக்க வேண்டி சூழல் கூட உருவாகும். தூய சக்தி, தூய சக்தி என்று சொல்லி இன்றைக்கு ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
