தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ திமுக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது; தர்மேந்திர பிரதான்

திமுக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது; தர்மேந்திர பிரதான்

திமுக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது; தர்மேந்திர பிரதான்

22


ADDED : மே 24, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

22

ADDED : மே 24, 2026 10:03 PM


22
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மக்கள் விரோத அரசியல் காரணமாக, தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பாஜவின் வெற்றிக்கு பின்னால் இந்த நாட்டு மக்கள் இருக்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இறுதியாக மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இங்கே தமிழகத்தில் மக்கள் விரோத அரசியல் காரணமாக, தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது.

தமிழக மக்களின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார் என்று நம்புகிறேன். இந்த நாட்டை ஒரு ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியுடன் உள்ளார்.

சிபிஎஸ்இ இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஆராயுமாறு ஐஐடி மெட்ராஸ் இயக்குநரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்தத் தொழில்நுட்பக் கோளாறை ஆய்வு செய்யும். ஆனால் இன்று அது தடையின்றி சீராகச் செயல்பட்டு வருகிறது.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் வழங்கப்படும். அதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us