தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விசில் சத்தத்தில் செவிடு ஆனது திமுக!

விசில் சத்தத்தில் செவிடு ஆனது திமுக!

விசில் சத்தத்தில் செவிடு ஆனது திமுக!


UPDATED : மே 04, 2026 12:32 PM

ADDED : மே 04, 2026 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 12:32 PM ADDED : மே 04, 2026 11:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது சிறப்பு நிருபர்


புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று பிரசாரம் செய்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, தங்களுக்கும் டில்லிக்கும் தான் போட்டி என்று பிரசாரம் செய்தார்.

விஜய் கூறிய புகார்கள், குற்றச்சாட்டுகள் எதற்குமே பதில் சொல்லாமல் கடந்து சென்றார் ஸ்டாலின். பதில் சொன்னால், விஜய் பெரிய ஆள் ஆகி விடுவார் என்ற எண்ணமும் அதற்கு காரணம். விஜய்க்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு, அவருக்கு திரண்டு வரும் கூட்டம், ஆகியவற்றை கண்டு மிரண்டு போன திமுகவினர், இந்த முறை மொத்தமாக பணத்தை இறக்கி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.

அதனால் தமிழகத்தில் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் பணம் புகுந்து விளையாடியது. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய், விஐபி தொகுதிகளில் 5 ஆயிரம் ரூபாய் என அள்ளி விட்டனர் திமுகவினர்.

அப்படி இருந்தும், ஓட்டுக்காக ஒரு பைசா செலவழிக்காத விஜய் கட்சி வேட்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் வெற்றிமுகத்தில் இருக்கின்றனர்.

கோடிக்கணக்கில் செலவழித்த திமுகவினர், தோல்வி முகத்தில் இருக்கின்றனர். விஜய் கட்சியினரின் விசில் சத்தம், திமுகவினரை செவிடு ஆக்கி விட்டது என்பதே இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us