தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி

எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி

எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி


UPDATED : மார் 29, 2026 10:57 PM

ADDED : மார் 29, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2026 10:57 PM ADDED : மார் 29, 2026 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''நடிச்சா மட்டும் போதுமா; நாட்டை கொடுத்து விடுவீர்களா'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வந்தவாசியில், தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் பேசியதாவது: நீங்கள் எதற்கு மொபைல் போன் வைத்துள்ளீர்கள். எத்தனை நாளைக்கு 'ரீல்ஸ்' பார்த்து கொண்டே இருப்பீர்கள். அறிவை தேடி ஓடுங்கள். நடிச்சா போதுமா, நாட்டை கொடுத்து விடுவீர்களா, நடிச்சா நோட்டை கொடுப்போம். நடிப்பதை நிறுத்தி விட்டால், நாட்டை கொடுப்போம் என்றால் உங்களுக்கு அறிவு இருக்கா.

எங்களைப் பார்த்தால், பைத்தியமாக தெரிகிறதா. காமராஜர், கக்கன் ஆகியோர் எல்லாம் தலைவர் என்றால், நடிகன் எப்படி தலைவன் ஆவான். கலையை ரசி, போற்று. அவன் கிட்டே நாட்டை கொடுப்பேன் என்றால், தலைவனுக்கும் நடிகனுக்கும் வேறுபாடு தெரியாத தற்குறியா நீ.

கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், திரையரங்கில் தலைவனை தேடவில்லை. ஓட்டை 500, 1000 ரூபாயக்கு விற்பது, வாக்கரிசி வாங்கி தின்பதற்கு சமம். விசிலை ஊதுவதற்கு என்ன செய்தான். திரையரங்கில் ஊதி திரிந்தான். இன்று தெருவில் ஊதி திரிகிறான் அவ்வளவு தான்.

சூரியனுக்கு ஓட்டு போட்டால், அவர்கள் வீட்டில் தான் விடிகிறது. இரட்டை இலை, 60 ஆண்டுகளாக மொட்டை இலையாக தான் இருக்கிறது. ஒன்றும் துளிர்விடல. எவன் தோற்றாலும், விவசாயி தோற்றான் என்ற நிலை உருவாகக் கூடாது.

என்னை வெற்றி பெற வைக்காமல், தேர்தலுக்கு பின் யாரேனும் மனு எடுத்து வந்தால், கொன்றே விடுவேன். அண்ணே, வீட்டை இடிக்கிறான், நிலத்தை பறிக்கிறான் என்றால், ஓட்டு போடும்போது எங்கே சென்றீர்கள். இந்த பிரச்னையை தருபவர்களே வெற்றி பெறுவது எப்படி?இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us