ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை அவருக்கே அனுப்ப டாக்டர்கள் முடிவு
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை அவருக்கே அனுப்ப டாக்டர்கள் முடிவு
UPDATED : டிச 19, 2025 02:44 AM
ADDED : டிச 19, 2025 02:41 AM

சென்னை: “எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, டாக்டர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை, அவருக்கே அனுப்பும் போராட்டம் நடைபெறும்,” என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகிறோம்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், 2020 டிச., 9ம் தேதி, அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். மேலும், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
மத்திய அரசில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ்., டாக்டர், நான்கு ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை, தமிழக அரசு டாக்டர்கள் 15 ஆண்டுகள் கழித்தே பெறுகின்றனர். இது போன்ற கோரிக்கைகளுக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. எனவே, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை, அவருக்கே அனுப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

