ஹிந்துக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தாதீர்கள்: வி.எச்.பி., பஜ்ரங் தள் எச்சரிக்கை
ஹிந்துக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தாதீர்கள்: வி.எச்.பி., பஜ்ரங் தள் எச்சரிக்கை
ADDED : நவ 24, 2026 04:00 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை தீப வழிபாட்டை தடுத்து ஹிந்துக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்த வேண்டாம்,'' என, மதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் தேசிய இணை அமைப்புச் செயலாளர் விவேக் குல்கர்னி எச்சரித்தார்.
இன்று (நவ.,23) மதுரை வந்த அவருக்கு மாநில அமைப்பாளர் பிரித்திவி ராஜன் தலைமையிலான பொறுப்பாளர்கள் வேல் கொடுத்து வரவேற்றனர். நேதாஜி ரோட்டில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்த பின் விவேக் குல்கர்னி கூறியதாவது:
2025ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை தீபத் துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இரு நீதிபதிகள் அமர்வும் அதை உறுதி செய்தது. அப்போதைய தி.மு.க., அரசு சிறுபான்மை அரசியலுக்காக அத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது.
ஓராண்டாக வழக்கு நடைபெற்ற நிலையில், இந்தாண்டு தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தற்போதைய த.வெ.க., அரசு, சீராய்வு மனு தாக்கல் செய்து அதே சிறுபான்மை அரசியலை செய்கிறது. தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் உள்ள ஹிந்துக்களும் ஓட்டளித்து தான் விஜய் முதல்வர் ஆகியியுள்ளார்.
பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஹிந்து வழிபாட்டு உரிமைகளில் அரசியல் செய்து, தீப வழிபாட்டை தடுத்து ஹிந்துக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்த வேண்டாம். ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீப வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார். மாலையில் திருப்பரங்குன்றம் சென்று தரிசனம் செய்தார்.
