விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ADDED : ஆக 07, 2026 03:57 PM

புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகிய எம்பிக்கள் விமர்சனங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுடன் நான் இருக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த எம்பிக்கள், உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாறிய எம்பிக்கள் மற்றும் அஜித் பவார் தரப்பு எம்பிக்கள், தேசியவாத மக்கள் கட்சி எம்பிக்கள் என மொத்தம் 45 பேர் இன்று காலைஉணவின் போது பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது மேற்கு வங்க எம்பிக்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: பொது மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு, மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம்.
மேற்கு வங்காளம் செழிக்கும் போது இந்தியாவும் செழிப்படையும். மாநிலத்திற்கு என இன்னும் கணிசமான திட்டங்கள் கா்திருக்கின்றன. வளர்ச்சி என்பது மேற்கு வங்கத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தி விடக்கூடாது. வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிறந்த இணைப்பு வசதிகளும், வேகமான வளர்ச்சியும் தேவை.எம்பிக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் மனம் மற்றும் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
உங்களைப் பற்றி என்ன பேசப்படுகிறது என்று கவலைப்பட வேண்டாம். கவலைப்பட தேவையில்லை. உங்களுடன் நான் இருக்கிறேன். டிவி விவாதங்களில் தரக்குறைவாக பேசக்கூடாது. அனைத்து நேரங்களிலும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக தீவிரமாக ஈடுபட்டு இளைஞர்களுடன் கலந்துரையாட வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு தெரியபடுத்துங்கள்.பார்லிமென்டில் பேச வேண்டும். கோபமாக பேசவோ அல்லது ஆத்திரத்தில் கத்ததேவையில்லை, டில்லியின் வலைப்பின்னலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
