ஹவுதிகள் டிரோன் தாக்குதல்: இஸ்ரேல் விமான நிலையம் சேதம்
ஹவுதிகள் டிரோன் தாக்குதல்: இஸ்ரேல் விமான நிலையம் சேதம்
ADDED : செப் 07, 2025 08:05 PM

டெல் அவிவ்: ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்தது.
காசா நகரில், ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நீடித்து வருகிறது. இதில் ஆயிரகணக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேல் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஹவுதி அமைப்பினர் ஏராளமான டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனை இஸ்ரேலுக்கு வெளியே இடைமறித்து தாக்கி அழிவித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஒரு டிரோன் மட்டும் எலியாட் சர்வதேச விமான நிலையம் மீது விழுந்ததாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹவுதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை