தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

19


UPDATED : ஆக 11, 2026 11:48 AM

ADDED : ஆக 11, 2026 11:10 AM

Follow on GoogleFavourite on Google

19

UPDATED : ஆக 11, 2026 11:48 AM ADDED : ஆக 11, 2026 11:10 AM


19
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்

சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்- மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.

அவரை பின்பற்றி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் போதைப் பொருள் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப் பட்டது. அவர் போதைப்பொருட்கள் புழகத்தை தடுக்க சிறப்பாக பணி செய்த போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்த்தார்.

மாணவர்களுக்கு பரிசு!

பள்ளி, கல்லூரிகள் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திய மாணவர்களுக்கு முதல்வர் விஜய் பரிசு வழங்கினார். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகளுக்கான முதல் பரிசை கோவை செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டது.



சிறுவனுக்கு சல்யூட்

போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழாவிற்கு, போலீசாரின் மகன் ஒருவர் போலீஸ் உடையில் வந்து இருந்தான். சிறுவனை பார்த்து முதல்வர் சல்யூட் அடித்ததும், சட்டென சிறுவனும் பதிலுக்கு சல்யூட் அடித்தான். உடனே அந்த சிறுவனை விஜய் தூக்கி சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்தார்.



தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சென்னை மாநில கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us