தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று முதல் ‛இ-20' பெட்ரோல் கட்டாயம்

இன்று முதல் ‛இ-20' பெட்ரோல் கட்டாயம்

இன்று முதல் ‛இ-20' பெட்ரோல் கட்டாயம்


ADDED : ஏப் 01, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாடு முழுதும், இன்று முதல் 'இ - 20 பெட்ரோல்' எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவின்படி, இன்று முதல், நாட்டின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும், 'இ - 20' பெட்ரோல் வினியோகம் அமலுக்கு வருகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகன விலை, இன்று முதல் 0.5 - 2 சதவீதம் வரை உயர உள்ளது.

டாடா கார்கள் 0.5 சதவீதம் வரை, டாடா வர்த்தக வாகனங்கள் 1.5 சதவீதம்; எம்.ஜி., கார்கள் 2 சதவீதம்; பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆடி சொகுசு கார்கள் 2 சதவீதம் வரை, விலை உயர்த்தப் பட உள்ளன.

மத்திய கிழக்கு போரின் காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு, ஸ்டீல், அலுமினியம் விலை யேற்றம், அதிகரிக்கும் கப்பல் போக்கு வரத்து செலவுகள், வினியோக தொடர் சிக்கல்கள் உள்ளிட்டவை, விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என, வாகன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us