வெள்ளை அறிக்கை வெளியீடு: ரூ.2.47 லட்சம் கோடி கடனில் மின் துறை
வெள்ளை அறிக்கை வெளியீடு: ரூ.2.47 லட்சம் கோடி கடனில் மின் துறை
UPDATED : ஜூன் 25, 2026 12:16 PM
ADDED : ஜூன் 25, 2026 11:44 AM

சென்னை: மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். அவர், ''கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது'' என்றார்.
வெள்ளை அறிக்கை விபரம் பின்வருமாறு;
* 2001-2006: வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,355 கோடி.
* 2006-2011: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி.
* 2011-2016: வருவாய் ரூ.1,92,971 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி.
* 2016-2021: வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி.
* 2021-2026: வருவாய் ரூ.4,97,996 கோடி, செலவு ரூ.5,32,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி
25 வருடங்களாக..
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கூடுதல் வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம். தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
1.40 லட்சம் பணியாளர்களில் 74,714 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். மின்சாரத்துறையில் 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த, அரை மணி நேரத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
ரூ.215 கோடி சேமிப்பு!
கடந்த 2001ம் ஆண்டு 1.35 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் 99,573 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டன. தற்போது மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. 25 ஆண்டுகளாக பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1.50 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க திட்டமிட்டள்ளோம்.
எந்த ஊழலும்...
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திமுக ஆட்சி முகத்திரையை கிழிக்கும் வெள்ளை அறிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
