தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

4


ADDED : நவ 17, 2026 01:11 PM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : நவ 17, 2026 01:11 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணிலா: பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 23வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடந்த ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக உலகம் அடுத்தடுத்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; உலகில் தற்போது அமைதி மட்டுமே தேவை. நாடுகளுக்கு இடையே போட்டி தேவை இல்லை, ஒத்துழைப்பே அவசியம்.

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலகின் மக்கள் தொகையில் கால் பங்கைக் கொண்டுள்ளன. நமது பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து, இந்தப் பிராந்தியத்தை அமைதியின் அடையாளமாக மாற்ற முடியும்.

ஆசியான் நாட்டிற்கு இது எனது மூன்றாவது பயணம். இந்தியாவிற்கு ஆசியான் அளிக்கும் சிறப்பு முக்கியத்துவத்தை இது பிரதிபலிக்கிறது. இந்த மாநாடு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இன்று, இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவைகளும், வளர்ந்து வரும் சுற்றுலாவும் நமது உறவு அதிகரித்து வருவதற்கான சான்றுகளாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us