sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

/

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

4


UPDATED : செப் 05, 2025 09:58 PM

ADDED : செப் 05, 2025 08:19 PM

Google News

4

UPDATED : செப் 05, 2025 09:58 PM ADDED : செப் 05, 2025 08:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: தேனி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரம் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை பலப்படுத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், முதல்வர் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளைப் பற்றியோ, அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றியோ ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது. கிடைக்கின்ற சந்தர்பத்தை மக்கள் நன்மைக்கு முழுமையாகப் பயன்படுத்துவதுதான் உண்மையான அரசு.

இன்று ஆடுதுறை பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அவர் அருகில் இருந்த இருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. குற்றவாளிகள் போலீசாரைத் தாக்குகிறார்கள். போலீசையே தாக்குகிறார்கள் என்றால் மக்களை பாதுகாப்பது யார்…? போலீசைக் கண்டு குற்றவாளிகளுக்கு பயமே இல்லை.

தமிழக மக்கள் வாழ்விலும், வளர்ச்சியிலும் சரிவை சந்தித்துவருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் குடும்பத்தை மட்டும் பற்றியே கவலைப்படுகிறார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வரைக்கும் வந்துவிட்டனர். இவர்கள்தான் நாட்டை ஆளவேண்டுமா?

ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். அதிமுகவின் பிரதான தேர்தல் அறிக்கை இதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

செங்கோட்டையன் பற்றி மவுனம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை பேட்டி கொடுத்தார். அப்போது, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அரவணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு 10 நாள் காலக்கெடு விதிக்கிறேன் என்று கூறியிருந்தார். இதைப் பற்றி இபிஎஸ் பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இபிஎஸ் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



மிரட்டி உறுப்பினர் சேர்ப்பு

போடியில் இபிஎஸ் பேசியதாவது: மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. பத்திரப்பதிவில் 10% கமிஷன் கேட்கிறார்கள், அதிகாரிகள் மேலிடத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று வசூல் செய்த பின்னர்தான், பதிவு செய்கிறார்கள்.. நல்லாட்சி என்றால் ஒரு அரசில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை தொடர வேண்டும்.திமுகவில் அவர்கள் குடும்பம் மட்டுமே சிறப்பாக இருக்கிறார்கள், வேறு யாருமே இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடுகட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இரவில் கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். பல கட்டடங்களை இன்று முழுமை பெறவில்லை, ஏழைகளால் வீடு கட்டவே முடியவில்லை. சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போன்று ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரவே விளம்பரம் செய்கிறார்கள். மக்கள், தொண்டர்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதால் வீடுவீடாகச் சென்று எங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டனர். அப்படி கேட்டும் யாராவது கையெழுத்துப் போடவில்லை என்றால் உங்களுக்கு உரிமைத் தொகை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டி, இதுவரை 90 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்தார்களாம். உண்மையாக சேர்த்தார்களா..? மிரட்டித்தானே சேர்த்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us