தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!

இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!

இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!

64


UPDATED : அக் 10, 2026 10:53 AM

ADDED : அக் 09, 2026 01:12 PM

Follow on GoogleFavourite on Google

64

UPDATED : அக் 10, 2026 10:53 AM ADDED : அக் 09, 2026 01:12 PM


64
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக தோல்விமுகம் கண்டுள்ள நிலையில், இபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

சட்டசபை பொதுத்தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் இபிஎஸ் முயற்சியை, அவரது எதிர்கோஷ்டி முறியடித்தது.

இதையடுத்து நடந்தவை எல்லாமே, இபிஎஸ்.,க்கு பின்னடைவை ஏற்படுத்தின. அதிமுக சார்பில் வெற்றி எம்எல்ஏ.,க்கள் 6 பேர், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இபிஎஸ் முடிவுகளை எதிர்த்து வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.

எனினும், தேர்தல் ஆணைய விதிமுறைகள் வலுவாக இருந்த காரணத்தால் அவர்களால் இபிஎஸ்சை., எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்து விட்டது. நான்கு மாதங்களுக்கு முன் அதிமுக வென்ற இரு தொகுதிகளிலும், இப்போது விஜய் கட்சி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.

திமுக இரண்டாம் இடத்துக்கு முன்னேறி விட்ட நிலையில், அதிமுகவுக்கு இரு தொகுதியிலும் மூன்றாம் இடமே கிடைக்கும் நிலை இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் பிரச்னைகள் வெடிக்கும்; கட்சிக்குள் இபிஎஸ் தலைமைக்கு எதிரான குரல்கள் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us