பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது; மீண்டும் இணைந்தவர்களுக்கு இபிஎஸ் உத்தரவு
பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது; மீண்டும் இணைந்தவர்களுக்கு இபிஎஸ் உத்தரவு
ADDED : மே 28, 2026 10:27 PM

சென்னை: கட்சி உறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக, அக்கட்சியின் பொதுச்செயலர் இபிஎஸ்க்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணி திரட்டினார். அந்த அணியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதை த.வெ.க., ஆதரவு அணியாக மாற்றினார். தவெகவுக்கு ஆதரவு அளித்தவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
வேலுமணி அணியில் இருந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வுக்கு தாவினர். அதேபோல், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி அணிக்கு திரும்பினர்.இதனால் வலுவிழந்த வேலுமணி அணி, இபிஎஸ் உடன் சமாதான பேச்சில் இறங்கியது. இபிஎஸ்யை சந்தித்து, வேலுமணி தரப்பு சமரசம் செய்த நிலையில், 'மறப்போம், மன்னிப்போம்' என முடிவெடுத்து, இரு தரப்பினரும் மீணடும் ஒன்றாக இணைந்தனர்.
இந்நிலையில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தங்கள் பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
