உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 29, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது. இதனையடுத்து திமுகவை சமரசம் செய்ய சோனியா தலைமையில் இண்டி கூட்டணி தலைவர்கள் சென்னை வந்தனர். அவர்கள் ஸ்டாலினை சந்தித்து ஒரு மணி நேரமாக ஆலோசித்தனர். அவர்கள் திமுகவை நிலைப்பாட்டை மாற்ற வலியுறுத்தினர். ஆனால், இந்த சந்திப்பின் போது, திமுகவின் நிலைப்பாடு, மசோதாவை ஆதரிப்பதற்கான காரணம் குறித்து ஸ்டாலின் விளக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு முடிந்த ஒரு சில நிமிடங்களில் திமுக ஐடி விங்கின் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவு வெளியானது.
அதில், நியாயமான தொகுதி மறுவரையறை என்பதில் உறுதியாக உள்ளோம் எனக்கூறியதுடன், முந்தைய மசோதவை எதற்காக எதிர்த்தோம், திருத்தப்பட்ட மசோதாவை எதற்காக ஆதரிக்கிறோம் என விளக்கி உள்ளது.
மசோதாவை ஆதரிக்கும் முடிவில் திமுக உறுதியாக உள்ளது.
