ராகுல் தொடும் அனைத்தும் பேரழிவு: பா.ஜ., விமர்சனம்
ராகுல் தொடும் அனைத்தும் பேரழிவு: பா.ஜ., விமர்சனம்
ADDED : மே 09, 2026 08:35 PM

சென்னை: 'காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொடும் அனைத்தும், அரசியல் பேரழிவாக மாறி விடுகிறது' என, பா.ஜ., விமர்சித்துள்ளது.
லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அருகில், தி.மு.க., - எம்.பி.,க்கள் அமர்வது பொருத்தமாக இருக்காது. தி.மு.க., - எம்.பி.,க்களின் இருக்கைகளை மாற்றி தர வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை பதிவிட்டு, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரசை மட்டுமல்ல, ஒட்டுமொத்த, 'இண்டி' கூட்டணியையே முடிவுக்கு கொண்டு வருவதை, உறுதி செய்து வருகிறார். அவரின், ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு பிரசாரமும், ஒவ்வொரு தலையீடும், இந்த வீழ்ச்சியை மேலும் வேகப்படுத்துகிறது.
அந்த மனிதருக்கு, தொட்டதெல்லாம் பொன்னாகும் வித்தை தெரியும். ஆனால், அவர் தொடும் அனைத்தும் அரசியல் பேரழிவாக மாறிவிடுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
